படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, December 23, 2004

எங்கே இருக்கின்றன இந்தியப் பல்கலைக்கழகங்கள்?

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 21-ம் தேதியன்று வந்த ஒரு செய்தியின்படி ஆசிய அளவிலும் சரி, உலக அளவிலும் சரி இந்தியப் பல்கலைக்கழகங்களின் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. உயர் கல்வி வளர அரசாங்கம் அதிக நிதி ஒதுக்கி, தேவையான வசதிகளைச் செய்ய முன்வர வேண்டும்; கல்வியாளர்களும் மனது வைக்கவேண்டும்.

1 comment:

Venkat said...

ராதாகிருஷ்ணன் - வருத்தமான உண்மை. பத்தாண்டுகளுக்கு முன்னால் இந்திய அறிவியல் கழகம், ஐஐடி கான்பூர், ரூர்க்கி போன்றவை தலை நூறில் இருந்தன. ஆனால் இப்பொழுது இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது.

சீன, கொரிய, சிங்கப்பூர், தைவான் பல்கலைக்கழகங்கள் முன்னுக்கு வருவதும் உண்மையான விஷயம்தான். என்னுடைய பல்கலையில் நடக்கும் விவாதங்களில் இவர்களைக் கவர்வது பற்றி தவறாமல் இடம்பெறுகின்றது.