தங்களது 'வாசகன்' வலைப்பதிவில் பின்னூட்டமிட முனைந்தபோது, 'Comments are for team members only.' என்ற செய்தி வந்ததால் அப்பின்னூட்டத்தை இங்கேயே இடுகிறேன். இது உங்களைச் சென்றடைந்தால் மகிழ்வடைவேன்.
புத்தகங்கள் சிலவற்றைப் பற்றி அருமையாகச் சொல்ல ஆரம்பித்துள்ளீர்கள்; ஆவலுடன் வாசித்துக்கொண்டுள்ளேன். எனது வேண்டுகோள் என்னவெனில், ஒவ்வொரு புத்தக அறிமுகத்தின்போதும் அதன் முழு விவரங்களையும் (பெயர், ஆசிரியர், பதிப்பகம், ISBN [இருந்தால்], விலை முதலானவை) தெரிவித்தீர்களேயானால், அவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு பின்னாளில் வாங்கி வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
அன்பும், நன்றியும்.
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Thursday, January 27, 2005
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அவருக்கு நானும் ஒரு மறுமொழி எழுத எண்ணி முடியாமல் போனது. அதையும் இங்கேயே கொடுத்து விடுகிறேன்,
இது பொன்னியின் செல்வன் போன்ற கல்கியின் நூல்களின் மின் வடிவம் பற்றியது. குறுந்தகடாக வந்த நாவல் வெறும் உரையாக இருப்பதால் ஓவியங்களுடன் வந்த புத்தகம் படித்த அனுபவம் கிடைக்குமா என்று கேட்டிருந்தார். தாளைவிடவும் மின்வடிவத்தின் பல்லூடகத்தன்மை அதிகம்தானே. வரையப்பட்ட படங்கலோடு மட்டுமல்லாமல், கதை நடந்த பகுதியின் நிலவரைபடம் ( map) போன்ற கூடுதல் படங்களையும் சேர்த்து அந்த நிறுவனம் கொடுத்தால் இன்னும் நல்ல அனுபவம் கிடைக்கலாமே.
என்னளவில் தாளில் அச்சிட்ட புத்தகங்கள் தரும் அனுபவம் என்றுமே கணித்திரையில் வாசிப்பது தரமுடியும் என்று நான் நம்பவில்லை. ஆனால் வளையக்கூடிய மெல்லிய கணித்திரைகள் தாளுக்கு மாற்றாக ஆராய்ச்சியில் இருக்கின்றன. அவை புழக்கத்துக்கு வந்தால் அவை தாளில் அச்சிட்டவற்றுக்கு சவாலாக அமையலாம்.
எனக்கும் அதே கேள்வி தான் திரு.மாலனிடம். பின்னூட்டம் சில நேரம் கசப்பதாலும் குறைந்தது அவருடைய இ-மெயில் முகவரியாவது எங்காவது அவர் இடலாம். நம்மூரை (திருநெல்வேலி) பத்தி சொன்ன உடனே படிக்கனும்னு தோனுது.
By: Vijay
காசி மற்றும் நண்பர்களுக்கு,
மாலன் குறிப்பிடுவது
இந்த சிடி-யை என்று நினைக்கிறேன். http://www.chennainetwork.com/ நிறுவனம் வெளியிட்டிருக்கும் தமிழ் மின்னூல் தொகுப்பு, கம்பராமாயணம் சிலகாலம் முன்பு வாங்கி(அடுக்கி)னேன்.
PDF & யுனிக்கோடில் உள்ளது வெறும் எழுத்துக்கள் மட்டும்தான். நீங்கள் சொல்வதுபோல் ஓவியம் மட்டுமல்லாமல், மேப் போன்ற் மேல்விவரங்கள் கொடுக்கலாம்தான். ஆனால் அது கட்டுப்படியாகும் விலையா, தரமான வெளியீடா என்பதில் இருக்கிறது. அப்படி கொடுத்து அது ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மேல் போனால் எங்காவது நூலகத்துக்கு வாங்கி அடுக்க வசதிப்படும்.:)
என்றென்றும் அன்புடன்,
அன்பு
ஆமாம். என்னாலும் முடியவில்லை. புதிதாக அவர் ஆரம்பித்திருக்கும் எம்எஸ்என்னிலும் முடியவில்லை. அனாமதேயப் பதிவினைத் தடுத்து கணக்கு வைத்திருப்போர் மறுமொழிய அனுமதிக்கலாம் என்பது எனது கருத்து.
By: மூர்த்தி
காசி மற்றும் நண்பர்களுக்கு,
மாலன் குறிப்பிடுவது
இந்த சிடி-யை என்று நினைக்கிறேன். http://www.chennainetwork.com/ நிறுவனம் வெளியிட்டிருக்கும் தமிழ் மின்னூல் தொகுப்பு, கம்பராமாயணம் சிலகாலம் முன்பு வாங்கி(அடுக்கி)னேன்.
PDF & யுனிக்கோடில் உள்ளது வெறும் எழுத்துக்கள் மட்டும்தான். நீங்கள் சொல்வதுபோல் ஓவியம் மட்டுமல்லாமல், மேப் போன்ற் மேல்விவரங்கள் கொடுக்கலாம்தான். ஆனால் அது கட்டுப்படியாகும் விலையா, தரமான வெளியீடா என்பதில் இருக்கிறது. அப்படி கொடுத்து அது ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மேல் போனால் எங்காவது நூலகத்துக்கு வாங்கி அடுக்க வசதிப்படும்.:)
அன்புள்ள நண்பர்களுக்கு,
திருத்திக் கொண்டுவிட்டேன்.இப்போது யார் வேண்டுமானலும் பின்னூட்டம் இடலாம். முதலில் அமைப்பு (செட்டிங்ஸ்) எப்படி இருக்கிறது என்பகைக் கவனியாமல் பதிப்பித்துவிட்டேன்.
நூல் விவரம் முகவரிகள் கொடுக்கலாம்தான்.ஆனால் அது ஒரு விளம்பரமாகவோ, அல்லது நுல் விமர்சனமாகவோ தோற்றம் தரக் கூடும் என்பதால் அதைத் தவிர்த்தேன். அதற்கும் ஒருவழி கண்டு பிடிக்கலாம்.
கல்கியின் படைப்புக்களை வெளியிட்டிருப்பது அன்பு குறிப்பிடும் நிறுவனம்தான். அவர்கள் முன்பும் பழந்தமிழ் இலக்கியங்களை வெளியிட்டிருக்கிறார்கள். எல்லாமே PDF கோப்புகள்தான். யூனிகோட் இடத்தை அடைக்கிறது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது ஓரளவு உண்மையும் கூட.( 16 பிட் என்பதால்) ஆனால் அதை வைத்துக் கொண்டே என்னவெல்லாம் செய்யமுடிகிறது பாருங்கள்.
அனைவருக்கும் நன்றி.
மாலன்
காசி மற்றும் நண்பர்களுக்கு,
மாலன் குறிப்பிடுவது
இந்த சிடி-யை என்று நினைக்கிறேன். http://www.chennainetwork.com/ நிறுவனம் வெளியிட்டிருக்கும் தமிழ் மின்னூல் தொகுப்பு, கம்பராமாயணம் சிலகாலம் முன்பு வாங்கி(அடுக்கி)னேன்.
PDF & யுனிக்கோடில் உள்ளது வெறும் எழுத்துக்கள் மட்டும்தான். நீங்கள் சொல்வதுபோல் ஓவியம் மட்டுமல்லாமல், மேப் போன்ற் மேல்விவரங்கள் கொடுக்கலாம்தான். ஆனால் அது கட்டுப்படியாகும் விலையா, தரமான வெளியீடா என்பதில் இருக்கிறது. அப்படி கொடுத்து அது ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மேல் போனால் எங்காவது நூலகத்துக்கு வாங்கி அடுக்க வசதிப்படும்.:)
பி.கு: இந்தப் பின்னூட்டத்தை மிக சிரமப்பட்டு இட்டேன் ஆனால் இதுவரை ஒன்றும் வெளிவரவில்லை அதனால் இது நான்காவதுமுறை என்று நினைக்க்கிறேன்...
By: அன்பு
Post a Comment