படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, January 10, 2005

இந்த வார நட்சத்திரம் - எதிர்பாரா அழைப்பு

மாதத்திற்குச் சில முறை எழுதிக் கொண்டிருந்தேன். இனி ஒரு வாரத்திற்கு தினமும் எழுதியாக வேண்டும். சுதந்திரத்தைப் பறித்த தமிழ்மணம் வாழ்க! :-)

அனைவருக்கும் வணக்கம்!

எதை எழுதுவது? சென்ற வாரம் தமிழ்சசி, அதற்கு முன் வெங்கட் போன்றோர் ஓரு துறையை எடுத்துக்கொண்டு அதில் தூள்கிளப்பினார்கள், அதுபோல் இங்கு நடக்காது. ஆகவே வழக்கம்போல எதையாவது எழுதிச்செல்ல முயல்கிறேன். தினமும் புகைப்படம் ஒன்றை இடலாமென்று ஓர் எண்ணமுள்ளது, முடிந்தால் அதைப்பற்றிய சிறு குறிப்பும். கூடவே, நான்கேட்ட சில மேற்கத்திய செவ்வியல் இசைகளில் பிடித்தவற்றைச் சொல்லலாமென்றுள்ளேன், குறைந்தபட்சம் பெயர்களையாவது.

எழுதப்போகும் பதிவுகள் அளவில் சுமாரானவையாக இருக்கலாம் (சட்டி-அகப்பையை நினைத்துக் கொள்ளவும்), ஒருவாரம் எப்படியேனும் பொறுத்துக்கொள்ளுங்கள்.

4 comments:

Vijayakumar said...

தயங்காம அடிச்சி பட்டைய கிளப்புங்க. மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்.

மாயவரத்தான் said...

கலக்குங்க..! கலங்க நாங்க ரெடி!!!

இராதாகிருஷ்ணன் said...

நன்றி விஜய், மாயவரத்தான்!

Chandravathanaa said...

இராதாகிருஷ்ணன்

ஒரு துறை என்று வரும் போது அது பயனுள்ளதாக இருந்தாலும்
அத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே அதை ரசிப்பார்கள்.
நீங்கள் பல்வேறு விடயங்களைத் தொடும் போது அதைப் பலரும் ரசிப்பார்கள்.
ஆகவே தயங்காமல் எழுதுங்கள்.