படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, January 13, 2005

பொங்கலுக்கு முந்துன நாள்

நம்மூர்ல இன்னிக்கு போகீங்களா, ஒன்னுந் தெரியமாட்டேங்குதுங்க இங்க! இந்நேரம் எல்லா வூட்லயும் பூசி மொழிகி கோலம்போட்டு காப்புக் கட்டீருப்பாங்க. அத்தோட அத முடிச்சுக்கிட்டாப் பத்தாதுங்களா?

வெநாயகர் சதுர்த்தியன்னைக்கு எங்கூர் புள்ளயார் கோயிலுக்கு கொழுக்கட்டகளக் கொண்டுக்கிட்டுப்போயி வேண்டிக்குவாங்க. அதுக்கப்புறம் அதயே அங்க பெரசாதம்ன்னு திருப்பித் தருவாங்க. கோயில்ல அன்னைக்குக் கொஞ்ச நேரம் சீர்காழி, டி.எம்.எஸ் பாட்டுக பாடிக்கிட்டு இருக்கும். அந்தளவுக்குத்தான் வெநாயகர் சதுர்த்திங்கறது நடந்துக்கிட்டிருந்தது. இன்னிக்கென்னடான்னா வண்ண வண்ணமா அந்த வெநாயகர், இந்த வெநாயகர்ன்னு பல தினுசுல, அளவுல கண்ட ரசாயனச் சாமாங்களப் போட்டுச் செய்யறதோட நிக்காம, அதுகளத் தண்ணீல கரைக்கெறேம் பேர்வழின்னு சொல்லிக்கிட்டு கூட்டங்கூட்டமா சத்தம் போட்டுக்கிட்டுப் போய் கடல்ல கொட்டி நாறடிக்கறாங்க. அதப்பாத்துட்டு மித்த ஊரு சனம் சும்மா இருக்குங்களா, தம் பங்குக்கு ஆறு, கொளம் குட்டைகள ஒரு வழி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

அதமாதிரியே போகியக் கொண்டாடரேன்னுட்டு கண்டதப் போட்டு எரிச்சு கூத்தடிச்சிட்டிருக்காங்க. இப்படி குப்ப கூளத்த வழில போட்டு எரிக்கற சமாச்சாரத்த எங்கயும் பாத்ததில்லீங்க. எதெதுலயோ முன்னேறறோங்கறோம், இதுகள்ல மட்டும் ஏம்பின்னுக்குப் போறோம்னு தெரீலீங்க!

3 comments:

Anonymous said...

நம்மூர்ல காப்புக்கட்றது, வீடு சுத்தம் பண்றது மட்டும்தானே. எரிக்கவெல்லாம் செய்வாங்களா?

By: தங்கம்

இராதாகிருஷ்ணன் said...

செய்கிறார்கள். உதாரணத்திற்குப் பாருங்கள்: http://www.thatstamil.com/news/2005/01/13/chennai.html

Chandravathanaa said...

எனக்குத் தெரிந்து இலங்கையில் இப்படிப் போகிப் பண்டிகை இல்லை.
ஆனால் கூட்டிக் கழுவித் துடைத்து... அமர்க்களப் படுத்துவார்கள்.
பழசுகளை எல்லாம் வீட்டின் பின் முற்றத்தில் இருக்கும் குப்பைக்கிடங்கில் போட்டு எரிக்கவும் தவறுவதில்லை.