படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, January 06, 2005

டியேகோ கார்சியா (Diego Garcia)

அமெரிக்காவின் இராணுவ தளங்கள் ஜெர்மனி, தென்கொரியா போன்ற நாடுகளில் இருப்பது தெரியும். ஆனால் இந்தியப் பெருங்கடலின் தென்முனையில் உள்ள ஒரு தீவில்கூட இருப்பது இன்றுதான் தெரியவந்தது, சுனாமியின் பாதிப்பு இத்தீவிற்கு வரவில்லை என்ற செய்தியின் வாயிலாக. அத்தீவு மட்டும் எப்படித் தப்பித்தது என்ற சர்ச்சையும் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

டியேகோ கார்சியா இந்தியப் பெருங்கடலின் தென்முனையிலுள்ள பெரிய தீவு; இந்தியாவிலிருந்து 1000 மைல்களுக்கு அப்பாலுள்ளது. பிரிட்டிஷாருக்குச் சொந்தமான இத்தீவில் இப்பொழுது அமெரிக்க விமான மற்றும் கடற்படைப் பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கிருந்தும் வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான் மீதான விமானத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சி.ஐ.ஏவின் சில வேலைகளுக்கும் இத்தீவு உபயோகப்படுத்தப்படுகிறதாம்.

டியேகோ கார்சியாவைப் பற்றிய விவரங்களை இங்கே காணலாம். அதன் வரலாறைப் படிப்பதால் ஏற்படுவது வழக்கமான குமுறல்தான், அதனால் ஆகிவிடப்போவது ஒன்றுமில்லை.

தொடர்புடைய சில செய்திகள்:
Diego Garcia Navy base reports no damage from quake, tsunamis
Diego Garcia Escapes Tsunami Damage

2 comments:

Anonymous said...

அய்யா,
நல்ல தகவல்கள், இப்படி ஒரு தீவு இருப்பதை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். அத்தீவின் சரித்திரம் சிறிது படித்தேன். அதே ஆங்கிலேய அடக்குமுறை, என்ன சொல்ல....


By: சம்மி

Chandravathanaa said...

வணக்கம் இராதாகிருஷ்ணன்

என்னுடன் தனிப்பட்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி.

நட்புடன்
சந்திரவதனா