படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, January 04, 2005

ஒன்னு ரெண்டு மூனு

ஒன்று - யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு - முகத்தில் கண் இரண்டு
மூன்று - முக்காலிக்குக் கால் மூன்று
நான்கு - நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து - ஒருகை விரல் ஐந்து
ஆறு - ஈயின் கால் ஆறு
ஏழு - வாரத்தின் நாள் ஏழு
எட்டு - சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது - தானிய வகை ஒன்பது
பத்து - இருகை விரல் பத்து.

மேற்கண்ட பாடல் 'எனது முதல் மழலை மொழி பாடல்கள்' என்ற புத்தகத்தில் (ISBN: 81-7478-233-8) இடம்பெற்றுள்ளது. இதை வாசித்துக் காட்டும் போதெல்லாம் ஏனோ கீழ்க்கண்ட பாடல்தான் நினைவுக்கு வந்து காற்றில் கலக்கிறது:

ஒன்னு - உங்க வீட்டுப் பொண்ணு
ரெண்டு - ராமலிங்கம் கண்ணு
மூனு - முருங்கப் பட்டத் தோலு
நாலு - நாய்க்குட்டி வாலு
அஞ்சு - அவரக்காப் பிஞ்சு
ஆறு - ரோட்டுமேல காரு
ஏழு - எலிக்குட்டி வாலு
எட்டு - டொம் டொம் தட்டு
ஒம்போது - ?
பத்து - ?

ஒம்போது, பத்து? - ம். ஹும்.. ஞாபகத்திற்கு வருவேனா என்கிறது; யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். நன்றி!

3 comments:

Anonymous said...

10 - mothu

By: kannan

Vijayakumar said...

ஒன்பது - சில்லைரைக்கு இருக்கு அம்பது
பத்து - உன்(ங்க) வாயை பொத்து(ங்க) (இல்லன்னா விழும் குத்து)

(ங்க) - மரியாதை நிமித்தம்.

அல்வாசிட்டி.விஜய்

இராதாகிருஷ்ணன் said...

நன்றி கண்ணன், விஜய்!