படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, March 09, 2005

தேசியக் கொடியைத் தலைகீழாகக் குத்தாமலிருக்க

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பெருந்தலைகளே சில சமயங்களில் தேசியக் கொடியைத் தங்கள் உடையில் தலைகீழாகக் குத்திக்கொண்டுவிட்டு, பிற்பாடு அங்குள்ளவர்கள் எவரேனும் சுட்டிக்காட்டும்போது சங்கடத்தில் நெளிவது ஒன்றும் புதுமையான செய்திகளல்ல. சமீபத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூட அவ்வாறு குத்திக்கொண்டு வந்தார் என்று செய்திகள் வந்தன. கம்பங்களில் பறக்கவிடப்படும் கொடிகளுக்கும் இந்த கதி நடப்பதுண்டு.

தேசியக் கொடியிலுள்ள மூவர்ணங்களின் சரியான வரிசையை நினைவிற் கொள்ளும் வழிமுறை ஒன்றை நம்மூர் ஆசிரியர் ஒருவர் தம் மாணவர்களுக்குச் சொல்லித்தந்ததாக வந்த செய்தியை எங்கோ படித்ததாக மனைவி தெரிவித்தார். அது என்னவென்று கேட்டேன். வாழை இலையை விரித்து, அதில் சோற்றைப் போட்டுக் குழம்பை ஊற்றுவதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டுமாம். பச்சை கீழே வந்து விடுகிறதல்லவா? அடங்கப்பா! உதாரணம் நன்றாகத்தான் உள்ளது; சோற்று விஷயமாயிற்றே அவ்வளவு எளிதில் மறந்துவிடுமா என்ன!

4 comments:

சுந்தரவடிவேல் said...

நல்ல யோசனைதான்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

you mix rice with sambar or sambar with rice ! someone like me may think that both are same !

Vijayakumar said...

சூப்பரா சொன்னீங்க போங்க. அரசியல்வாதி என்னங்க, நானே தப்பு பண்ணியிருக்கேன். ஒரு தடவை ஃபிளாஷில் கொடி போட்டு சைட்டில் போட, ஒரு நண்பர் நடு இரவில் அலறி அடித்து போன் அடித்து கொடியின் படத்தை ஏன் தலைகீழாக போட்டிருக்கிறாய் என விட்டான் ஒரு டோஸ். ஞாபகம் வைக்க உங்க டெக்னிக் போதும்.

இராதாகிருஷ்ணன் said...

பின்னூட்டங்களுக்கு நன்றி! (அப்பாடா ஒரு வழியாக பின்னூட்ட வசதி மீண்டும் வேலை செய்கிறது.)