படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Saturday, March 26, 2005

செம்மறியாடு

சில நாட்களுக்கு' முன்பு சிறுவர் பாடல்கள் வலைப்பதிவிற்காக எழுத முயற்சித்த பாடலொன்று. சந்தேகமே வேண்டாம், ஆங்கிலப்பாடலின் 'உல்டா'தானிது. என்ன செய்வது, கற்பனை அந்த அளவுக்குத்தான் வேலை செய்யுது :(

ம்மே ம்மே ஆடே கம்பளி இருக்கா?
ஆமாம் ஆமாம் மூன்று பை இருக்கு!
ஒன்றெங்கள் இடையனுக்கு ஒன்றுங்களுக்கு
ஒன்றடுத்த ஊரில் இருக்கும் சின்னப் பையனுக்கு
செம்மறி ஆடே கம்பளி இருக்கா?
ஆமாம் ஆமாம் மூன்று பை இருக்கு!

[முதல் வரியில் 'ம்மே ம்மே'-வுக்கு பதில் 'ஆடே ஆடே' அல்லது 'செம்மறி ஆடே' என்றும் சொல்லலாம், இருந்தாலும் ஆடெழுப்பும் ஒலியைச் சொல்லும்போது கொஞ்சம் நன்றாக உள்ளதாக நினைக்கிறேன்.]

ஆங்கிலப் பாடலுக்கான மெட்டு: http://www.englishbox.de/song25.html

செம்மறியாடுகள் கூட்டமாகச் சாலைகளில் ஓட்டிச்செல்லப்படுவதைக் கண்டிருக்கிறீர்களா? குட்டியாட்டைக் கம்பளி போர்த்திய தோளில் சுமந்துகொண்டு கையில் பெரிய கோலுடன் ஆட்டுக்காரன் நடக்க, அவனருகே ஒன்றிரண்டு நாய்களும் ஓட, இரண்டு மூன்று கூட்டங்களாக (ஒவ்வொரு கூட்டத்திலும் பலநூறு ஆடுகள் இருக்கும்) ஆடுகள் செல்லும். இதேபோல வாத்துக் கூட்டத்தையும் ஒரே ஒருமுறை திருமூர்த்திமலை செல்லும் வழியிலுள்ள கிராமமொன்றில் மிகவும் சிறிய வயதில் கண்டிருக்கிறேன்.

2 comments:

பினாத்தல் சுரேஷ் said...

ஆச்சரியம்..

நான் இதே பாடலை -

கறுப்பாடே கறுப்பாடே கம்பளி இருக்குதா:
இருக்கண்ணே இருக்கண்ணே மூணு இருக்குது!
முதலாளிக்கு ஒண்ணு, துரைசாணிக்கு ஒண்ணு,
வேலியோரம் தூங்குகிற தம்பிக்கு ஒண்ணு -

என்று மொழிபெயர்த்தேன்!

இராதாகிருஷ்ணன் said...

ஆச்சரியம்தான். இதுவும் நன்றாக உள்ளது. நன்றி!