படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, March 02, 2005

புதிய எண், பழைய எண்

தமிழகத்தில் கொஞ்ச நாட்களாக ஒரு கூத்து நடந்து கொண்டுள்ளது. அஞ்சல் முகவரிகளில் வீட்டின் புதிய இலக்கம், பழைய இலக்கம் என்று எழுதப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். புதிய எண்கள் எப்போதிருந்து, எதற்காகக் கொடுக்கப்பட்டன, இவ்வெண்கள் யாரால் நிச்சயிக்கப்படுகின்றன, அஞ்சல் முகவரியில் இரு இலக்கங்களையும் குறிப்பிட்டாக வேண்டுமா, இருப்பின் எவ்வளவு காலத்திற்கு அவ்வாறு செய்யவேண்டும் முதலான தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் கேள்விப்பட்டதில்லை (அப்படியொன்று இருந்தால்தானே என்கிறீர்களா?), தெரிந்தவர்கள் சொல்லவும்.தினத்திற்கு நான்கு கடிதங்கள் எழுதி அனுப்புவதில்லையென்றாலும் தெரிந்துகொள்ளலாமே ஒரு நப்பாசைதான், வேறு என்ன!

6 comments:

Anonymous said...

எதுக்குமே வழிகாட்டுதல்கள் இல்லை அங்கே. ஒருத்தன் ஒடுனா கேட்டுட்டு ஓடு, ஊரே ஓடுனா கேக்காம ஓடுன்னு ஒரு பழமொழியை என்னுடைய பேராசிரியர் ஒருமுறை சொன்னார். அதுமாதிரி எல்லாரும் ஏதோ ஒன்னை செய்றாங்க. அவ்வளவுதான்

Anonymous said...

நான் ஒண்ணு சொல்லட்டுமா? நேரா உங்க தபால் நிலையத்துக்குப் போங்க. அங்க உள்ள அலுவலர்கள இதப்பத்தி கேளுங்க. எதனா கேட்டா "Right of Information"ந்னு சொல்லுங்க. என்ன நடந்துச்சுன்னு இங்க வந்து எழுதுங்க. உங்க அடுத்த பதிவுக்கு மேட்டர் தயார்.

Anonymous said...

புதிய எண் கீழ் பழைய எண் ஒரு பின்னம் போலப் போடுவதுதான் நான் பார்த்த வரை செயல் முறையாக உள்ளது. அதவது புது எண் 20, பழைய எண் 23 என்பது 20/23 என்று எழுதப் படுகிறது. ஆனால் இதில் ஒரு சிக்கல் உடனடியாக வெளியில் தெரிகிறது. பழைய எண் ஏற்கனவே ஒரு பின்னம் போல் இருந்தால் என்ன செய்வது? உதாரணம் 4/96.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

புதிய எண் கீழ் பழைய எண் ஒரு பின்னம் போலப் போடுவதுதான் நான் பார்த்த வரை செயல் முறையாக உள்ளது. அதவது புது எண் 20, பழைய எண் 23 என்பது 20/23 என்று எழுதப் படுகிறது. ஆனால் இதில் ஒரு சிக்கல் உடனடியாக வெளியில் தெரிகிறது. பழைய எண் ஏற்கனவே ஒரு பின்னம் போல் இருந்தால் என்ன செய்வது? உதாரணம் 4/96.
அன்புடன்,
டோண்டு ராகவன்
P.S. Your blog seems to have anonymous feedback as default, kindly do something.

Anonymous said...

சுனாமி நிகழ்வுக்குப்பின் நண்பர் ரஜினிராம்கி தனது முகவரி கொடுத்திருந்தார். அதனைப் பார்த்ததும் அப்போதே கேட்க நினைத்தேன். ஆனால் அந்த அசாதாரண சூழ்நிலையில் என்னால் கேட்க இயலவில்லை. இப்போது தாங்கள் பதிவாக எழுதி விட்டீர். தெரிந்தவர்கள் மேலும் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

இராதாகிருஷ்ணன் said...

பின்னூட்டங்களுக்கு நன்றி!
டோண்டு ராகவன், மூர்த்தி: சுட்டிக் காட்டியமைக்கு நன்றியும், ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பொழுது மறுமொழி இடுதலைக் கொஞ்சம் மாற்றியுள்ளேன். சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்துச் சொல்லவும்.
அப்புறம் மூர்த்தி, சும்மா வெறும் பெயரை மட்டும் சொல்லிக் கூப்பிடுங்கள் போதும் :-)