ஸ்விஸ் நிறுவனமான VICTORINOX-ன் பைக்கத்திகள், குறிப்பாக "Swiss Army Knives", மிகவும் பிரசித்தமானவை. இவற்றில் கத்தி, திருப்புளி, ரம்பம், கத்தரிக்கோல், அரம், பல்குத்தி, கடிகாரம், பேனா, முட்கரண்டி, திசைகாட்டி, டப்பா திறப்பான், சிறு விளக்கு, அது இதுவென்று என்னென்னவெல்லாமோ சேர்த்து பல வடிவங்களில் விற்பனைக்குவிட்டுள்ளனர். இந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ள வஸ்து USB நினைவகமாகும்.
ஹான்னோவரில் (ஜெர்மனி) இம்மாதம் 18-23ல் நடக்கும் CeBIT இப்புதுச்சரக்கு அரங்கேறுகிறது. தொடக்கத்தில் 64MB மற்றும் 128MB அளவுகளுடன் உள்ளூரில் சுற்றுவதற்கு கத்தி கபடாக்களுடன் (கபடா என்றால் என்ன?) ஒரு மாடலும் (மாடலுக்கு தமிழில்... வடிவம்? ம்ஹும்..), விமானத்தில் பயணம் செய்ய அவை இல்லாமல் ஒரு மாடலும் சந்தைக்கு வருகின்றனவாம். USB நினைவகம் ஏற்கனவே இல்லாதவர்கள் ஒன்று வாங்க முயற்சிக்கலாம். விலை? 64MB அளவுள்ளது, €55 என்று ஒரு வலைப்பக்கத்தில் கண்டேன். இதன் தரவுத்தாளை (datasheet) இங்கே சென்று காணுங்கள்.
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Monday, March 15, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment