வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் பயணச் சீட்டுகளை எம்.எம்.எஸ் மூலமாகப் பெறும் வசதியினை ஸ்விஸ் ரயில்வே அறிமுகப்படுத்துகிறது. இச்சேவையைப் பயன்படுத்த விரும்புவோர் முதலில் ஒருமுறை தங்களது எம்.எம்.எஸ் கொண்ட செல்பேசி, செல்லுபடியாகும் கடனட்டை போன்ற விவரங்களை ரயில் நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு எந்நேரமும் இயங்கும் தொலைபேசி எண்ணிற்கு (இதற்குத் தனிக் கட்டணம் என்பது வேறு) அழைத்துச் சொன்னால் வேண்டிய பயணச் சீட்டு செல்பேசிக்கு எம்.எம்.எஸ் செய்தியாக அனுப்பப்பட்டுவிடும். அதில் வரும் இருபரிமாண பட்டைக் கோட்டை(2D-barcode), பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் தங்களிடமுள்ள விசேட உணரி மூலம் சரிபார்த்துக் கொள்வர். பயணச் சீட்டிற்கான தொகை கடனட்டை மூலம் வசூலித்துக் கொள்ளப்படும். ஆரம்ப கட்டமாக 780 ரயில் இணைப்புகளுக்கு இவ்வசதி வழங்கப்படும் என்கிறார்கள். நவீனத் தொலை நுட்பியலைக் கொண்டு மற்றுமொரு சேவை!
[எம்.எம்.எஸ் - செல்பேசிகளின் வழியாகப் பல்லூடச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு நுட்பியல். இதன் மூலமாக உரைச் செய்தி, படங்கள், ஒலி, ஒளி முதலானவைகளை அதனை ஆதரிக்கும் செல்பேசிகளில் அனுப்பவும் பெறவும் முடியும்.]
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Tuesday, November 22, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ராதா, இன்னும் எஸ் எம் எஸ்சே எனக்கு இங்கே கைவரப்பெறவில்லை. அதுக்குள்ளே இதுவேறா? சிலர் எக்கச்சக்கமாக எஸ் எம் எஸ் பயன்படுத்துகிறார்கள். சீக்கிரம் பழகவெண்டும்.
அதுசரி, //இருபரிமாண பட்டைக் கோட்டை(2D-barcode), // செல்பேசித்திரையின் அகலத்துக்குள்ளே இதை அடக்கிவிடுகிறார்களா, பலே!
முன்பு நானும் செல்பேசியின் வாயிலாக எக்கச்சக்கமாக எஸ்.எம்.எஸ்களை அனுப்பியுள்ளேன். இப்போதெல்லாம் பெரும்பாலும் உலாவியின் மூலமாக அனுப்புவதால், செல்பேசியில் தட்டும் வேகம் மட்டுப்பட்டுவிட்டது :(
சீக்கரம் பழகிக்குங்க, குறுங்செய்தி பலசமயங்களில் வசதியும், மலிவும் கூட.
இதற்கு தமிழ் இடைமுகம் கூட கொண்டுவந்தார்கள் (முத்துநெடுமாறன்); கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். தமிழகத்திற்கு வந்ததா என்று தெரியவில்லை.
Post a Comment