படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, July 31, 2005

சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீடு

இந்தியாவில் சில்லரை விற்பனையில் (retail business) பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபட அனுமதிக்கும் யோசனை அரசின் பரிசீலனையில் உள்ளதை செய்திகளில் அடிக்கடி காண்கிறோம். ஆரம்ப கட்டத்தில் பல கட்டுப்பாடுகளுடன் (10,000 சதுர அடித் தளம், ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு கடை போன்றவை) மாறுகடையை (market) இவர்களுக்குத் திறந்து விடப்பட்டாலும், காலப்போக்கில் இவ்விதிமுறைகள் தளர்த்தப்படும் அல்லது காற்றில் விடப்படும். இப்படியொரு மசோதா நாடாளுமன்றத்திற்கு வந்தால் வழக்கம்போல நமது 'மாண்புமிகு' உறுப்பினர்கள் கூட்டத்தோடு கோவிந்தா போட்டு நிறைவேற்றி விடுவார்கள். அப்புறம் நடைமுறைக்கு வந்தபின்தான் அதிலுள்ள சிக்கல்கள் தெரிந்து 'போராட' ஆரம்பிப்பார்கள் ('போட்டா' சட்டம் ஓர் உதாரணம்).

சில்லரைப் பெரு வியாபாரத்தில் ஈடுபடுள்ள உள்நாட்டு ஜாம்பவான்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த யோசனையை எதிர்க்கிறார்கள். அரசு என்ன முடிவெடுக்கப் போகிறதென்பதைப் பார்க்கவேண்டும். மாறுகடையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்படும் பட்சத்தில் ஏதோ சில நன்மைகள் இருந்தாலும், பலதரப்பு மக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது எனது பொத்தாம்பொதுவான எண்ணம்.

4 comments:

தமிழ் சசி | Tamil SASI said...

இராதா,

சில்லறை வியபாரத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் சிறு வியபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை தான்.

ஆனால் காலப்போக்கில் மாறிவரும் சூழலில் நம்மை இணைத்துக் கொள்வதும் அவசியம்.

கம்யுனிஸ்டுகள் கூக்குரலிடுவது பற்றி நாம் பெரிதாக கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எதற்கு தான் கூக்குரலிடவில்லை :-)

கம்யுனிச நாடான சீனா இவ்வாறான சீர்திருத்தங்களில் இந்தியாவை விட பல மடங்கு ஆர்வத்துடன் இருப்பதால் தான் அதனுடைய பொருளாதாரம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

அந்நிய முதலீடு இந்தியாவிற்கு வருவதன் மூலமாக பெருகும் வேலைவாய்ப்புகள், மக்களுக்கு கிடைக்க கூடிய நன்மைகள், பொருளாதாரத்திற்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்.

அந்நிய முதலீடு பெருகுவதன் மூலமாக நம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் பொழுது இது வரை இருக்கும் பல பிரச்சனைகள் ஏழ்மை உட்பட இயல்பாக குறைந்துவிடும்

இராதாகிருஷ்ணன் said...

நன்றி தமிழ் சசி! அந்நிய முதலீடுகள் நிச்சயம் தேவை. ஆனால் எல்லாத் துறைகளுக்கும் அது தேவைதானா என்ற சந்தேகம் உள்ளது. குறிப்பாக, சில்லரை வியாபாரத்தில் ஓர் ஒழுங்கற்ற கட்டமைப்புதான் நம்மிடம் உள்ளது. உள்நாட்டு நிறுவனங்கள் மெதுவாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். இச்சமயத்தில் நல்ல அனுபவமும், பணபலமும் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் மாறுகடை முழுவதையும் ஒன்று தங்கள் பக்கம் வழித்தெடுத்துவிடலாம் அல்லது இது தேறாது என்று விட்டும்விடலாம் (பின்னது நடப்பது கடினமே).

Thangamani said...

சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீடு இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த, நடுத்தர, ஏழை வியாபாரிகள் அதிகமாக இருக்கும் நாட்டிற்கு ஏற்றதல்ல என்றே நினைக்கிறேன். ஏற்கனவே பெங்களூரில் மெட்ரோ என்ற சந்தைகள் வந்துவிட்டன. இவை நாளடைவில் உள்ளூர் சந்தைகளை அழித்துவிடும். இதனால் பெரிய வேலைவாய்ய்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த பெரிய சந்தைகள் எல்லாவற்றுக்கும் இயந்திரங்களையே பாவிக்கப்போவதால், வேலை வாய்ப்பு என்பது அரிதுதான். இதை இந்தியா அனுமதிக்கக்கூடாது!

இராதாகிருஷ்ணன் said...

நன்றி தங்கமணி!