படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, June 24, 2005

தலைவர்களின் எழுத்தும் பேச்சும்

அனாமிகாவின் பசித்திரு! விழித்திரு!! பதிவைப் படித்ததும் அண்மையில் பத்ரி எழுதியிருந்த சத்யம் ஏவ ஜயதே பதிவு நினைவிற்கு வந்தது. அதில், இந்நாளைய அரசியல் தலைவர்கள் யாரும் அவ்வளவாக எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது எழுத முடியாத பின்னூட்டத்தை இங்கு இட்டுவைக்கிறேன்.

அறிவுசார் விவாதங்கள், கருத்துகளை இக்கணவான்கள் யாரும் நினைக்கிறார்களா என்றே தெரியவில்லை; பிறகுதானே பேச்சும் எழுத்தும். முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் தலைவர்களின் பேச்சுகள் கருத்து செறிவானவையாகவும், மக்களுக்குப் பயனுள்ளவையாகவும் இருப்பதாகக் கேட்டுள்ளேன். சுருக்கெழுத்து கற்றுக் கொள்ளச் சென்ற காலங்களில், அங்குள்ள ஆசிரியர் மூத்த மாணவர்களுக்கு நேரு முதலான தலைவர்களின் நாடாளுமன்றப் பேச்சைப் புத்தகங்களிலிருந்து பயிற்சிக்கு வழங்குவதைப் பார்த்திருக்கிறேன். அவ்வப்போது அப்பேச்சுகளைப் பற்றியும் சிலாகித்துச் சொல்வார். இப்போதுள்ள பல நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி யாவரும் அறிந்ததே! இவர்களிடமிருந்து எந்தப் பேச்சை, எழுத்தை எதிர்பார்ப்பது?

அதேபோல நம்நாட்டு நிறுவனத் தலைவர்களின் நிலைமை எப்படியோ?!

2 comments:

NambikkaiRAMA said...

நீங்கள் சொல்வது நியாயம் தான்.ந்ம் நாட்டு நிறுவனத்தலைவர்கள என்று நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்? அப்துல் கலாமும், மன்மோகன் சிங்கும் அறிவில் சளைத்தவர்கள் அல்ல!

இராதாகிருஷ்ணன் said...

அனாமிகாவின் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர்கள் போன்றவர்களைச் சொன்னேன். தங்கள் கருத்துக்கு நன்றி!