வலைப்பதிவில் எழுதி வாரங்கள் பலவாகிவிட்டன. அவ்வப்போது எட்டிப்பார்த்துவிட்டும், கொஞ்சம் கிடைக்கும் சந்தில் எப்போதாவது பின்னூட்டங்கள் இட்டுவந்தாலும் தொடர்ந்து எழுத முடியவில்லை. நேரத்தை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று தெரிகிறது, இருந்தும்.... எப்படியோ இப்புத்தக விளையாட்டின் மூலம் உள்ளே வந்தாயிற்று. அதற்காக செல்வராஜிற்கு மிக்க நன்றி, தாமதத்திற்கு வருத்தம் சொல்லிக்கொள்கிறேன்.
என்னுடைய வாசிப்பனுபவம் இதுவரை சொல்லப்பட்டவைகளிலிருந்து எந்த விதத்திலும் பெரிதும் வேறுபடாததால் அதைக் கூறத் தவிர்க்கிறேன். வாசித்தவை சில காலம் நினைவில் இருந்துவிட்டு பின்னால் ஏதோ 'கனவு' போலாகிவிடுகிறது (ஞாபக மறதிக்கு இப்படியொரு பூச்சு, கண்டுக்காதீங்க ;-) ). அவற்றிலுள்ள பெயர்கள், இடங்கள், நிகழ்வுகள் ஏதேனுமொரு நொடிப்பொழுதில் மின்னல் போல வந்து செல்லக்கூடும். இருந்தாலும் வாசிப்பென்பதே அச்சமயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அனுபவம், தெரிதல் என்று கொள்ளலாம்.
அப்படிக் கனவாக நிற்கும் மற்றும் சமீபத்தில் வாசித்த சில படைப்புகள் (தற்போக்கான வரிசை):
ஞானரதம் - சுப்ரமண்ய பாரதியார்
காதுகள் - எம்.வீ.வெங்கட்ராம்
சம்ஸ்காரா - யூ.ஆர்.அனந்தமூர்த்தி
தமிழகத்தில் கல்வி - வே.வசந்தி தேவியுடன் சுந்தர ராமசாமியின் உரையாடல்
குவாண்டம் கணினி - வெங்கடரமணன்
கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
பூரணி கவிதைகள் - பூரணி
கொங்கு வட்டாரச் சொல்லகராதி - பெருமாள் முருகன் (உசாத்துணை நூலென்றாலும் வாங்கிய காலத்தில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தது)
Education and significance of life - J.Krishnamurthy
Resurrection - L.Tolstoy
Life of birds - David Attenborough
O Jerusalem - Larry Collins, Dominique Lappiere
Five Past Midnight in Bhopal - Dominique Lappiere, Javier Moro
Nineteen Eighty-Four - George Orwell
New rulers of the world - John Pilger
போதும்..போதும்..
நிறைய நாட்களாக வாசித்துக் கொண்டிருப்பவை:
தமிழ்நாட்டுப் பறவைகள் - முனைவர் க.ரத்னம்
Savaging the civilized - Ramachandra Guha
படிக்க, வாங்க வேண்டியவை என ஒரு பெருஞ்சரம் உள்ளது, எப்போது என்றுதான் தெரியாது.
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Monday, June 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வித்தியாசமா நல்லா எழுதி இருக்கீங்க. தமிழ்ப்புத்தகங்கள் எல்லாம் (கோவையில்?) எங்கு வாங்குவீங்க. குறிப்பா அந்தப் பெருமாள் முருகன் அகராதிய நானும் வாங்கணும்னு தோணுது.
பறவைகளைப் பற்றிய புத்தகங்களை உங்கள் வாசிப்பில் பார்க்கிறேன். மாறுதலான ஆர்வம். நேசனல் புக் டிரஸ்ட் சில புத்தகங்களை வெளியிட்டிருப்பதாக நினைவு.
நன்றி செல்வராஜ், தங்கமணி!
கோவையில் விஜயா பதிப்பகத்தார் அவ்வப்போது புத்தகக் கண்காட்சி போடுவார்கள்; இல்லாத சமயத்தில் நேரே அவர்களின் கடையில் சென்று வாங்குவதும் உண்டு.
நேசனல் புக் டிரஸ்ட் நூல்களைப் பார்த்ததில்லை; அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது தேடிப்பார்க்கிறேன். பறவைகள், மரங்கள், மீன்கள் முதலானவைகளைப் பற்றித் தனித்தனிப் புத்தகங்கள் அடிக்கடி வெளியிடப்பட்டு பரவலாக வேண்டும். அப்போதாவது அவற்றின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்வர்.
Post a Comment