படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, June 19, 2005

தமிழகத்தில் புலிகளின் இரண்டாவது சரணாலயம்

இன்று காலையில் மகிழ்ச்சியானதொரு செய்தி கண்ணில்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலைப் பகுதியில் இருக்கும் இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயத்தைத் தமிழ்நாடு மாநில வனத்துறை புலிகளின் சரணாலயமாகவும (ஏற்கனவே இது யானைகளின் சரணலாயமாக உள்ளது) அறிவிக்கச் செய்த பரிந்துரையைப் புறத்திட்டு-புலி வழிநடத்துக் குழு (Project Tiger Steering Committee) ஏற்றுக்கொண்டு, அதை மையத் திட்டக்குழுவின் ஒப்புதலுக்கு முன்வரித்துள்ளது (forward). இந்த ஒப்புதல் கிடைத்துவிட்டால் இவ்விடம் தமிழகத்தில் அமையப்போகும் இரண்டாவது புலிகளின் சரணாலயமாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 88 (2001 கணக்கெடுப்பின்படி) என்றும், அவற்றில் 29 திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் காலக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ளன என்பது புதிதாகத் தெரிந்துகொண்ட செய்தி; ஏதோ இத்தனை எண்ணிக்கையிலாவது அவை பிழைத்திருக்கிறதே என்று ஆறுதல் அடையவேண்டியதுதான்.

செய்திக்கான சுட்டி.
தனது அண்மைய டாப்சிலிப் அனுபவத்தை அழகாக வடித்திருக்கும் நாராயணனின் வலைப்பதிவிற்கான சுட்டி.

6 comments:

சுந்தரவடிவேல் said...

ஆக 88தானா?!

Anonymous said...

இந்தப் புதிய சரணாலயத்துக்கு பேரு 'ராஜிவ் சரணாலயமா'?

முகமூடி said...

இந்த சரணாலயத்தில் இந்திய புலிகளுக்கு மட்டும்தான் அனுமதியா?

முகமூடி said...

// 1997இல் 73 புலிகள் இருப்பாதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இப்போது (2001இல்) 29 தானா? // புலிகளை கொல்லாதீங்கன்னு சொன்னா ஆரு கேக்கிறா?

Thangamani said...

:)

இராதாகிருஷ்ணன் said...

சுந்தரவடிவேல் - அப்படித்தான் சொல்கிறார்கள், எவ்வளவு சொற்பம் பாருங்கள்!

நவன் - சுட்டிக்கு நன்றி! http://nradhak.blogspot.com/2005/05/blog-post_111589447516922621.html
இது போன்ற காரணங்கள் ஏதாவது இருக்கலாம்.

பெயரிலி - இந்தக் கிண்டல்தானே வேண்டாங்கறது.

முகமூடி - ஏதோ பொடி வச்சுப் பேசறீங்க போலிருக்கே :-)

தங்கமணி - அதுக்கா சிரிச்சீங்க? :-)