"அம்மா இங்கே வா வா..." என்ற அகரவரிசை எழுத்துகள் வரும் பாடலைப் பாடிக் காட்டிக்கொண்டிருந்த போது பாடலில் இருந்த 'ஒள' வரி தடம் புரண்டு, "ஒளவியம் பேசேல்" என்ற ஆத்திச்சூடி வரியை வாய் உளறிவிட்டது. சமாளித்துக் கொண்டு ஒளவியம் என்றால் என்ன என்று யோசித்துப் பார்த்தேன்; அகராதிதான் கைகொடுத்தது. ஒள வரிசையில் வரும் வார்த்தைகள் கொஞ்சம்தான் எனினும் சில சுவையாக உள்ளன.
ஒள - அநந்தன் என்னும் பாம்பு; நிலம்; விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை இவற்றைக் காட்டும் ஓர் உபசருக்கம்; கடிதல்; ஒளவென்னேவல்.
ஒளகம் - இடைப்பாட்டு.
ஒளகாரம் - ஒள என்னும் எழுத்து.
ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஒளசரம் - கோடாங்கல்லு.
ஒளசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று. (அதென்ன உப புராணம்?)
ஒளசித்தியம் - தகுதி.
ஒளஷதம், ஒளடதம் - மருந்து.
ஒளடவம் - ஒளடவராகம்.
ஒளடனம் - மிளகு ரசம்.
ஒளதசியம் - பால், பழம், அமிழ்து; கீரம்.
ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம்.
ஒளதாரியம் - உதாரம்; மிகுகொடை; உதாரகுணம்; பெருந்தன்மை.
ஒளபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஒளபசானம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஒளரசன், ஒளரதன் - உரிமைமகன்; கணவனுக்குப் பிறந்த மகன்.
ஒளரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன்.
ஒளலியா - பக்தர்கள்.
ஒளவித்தல் - பொறாமைப்படுதல்.
ஒளவியம் - பொறாமை; தீவினை.
ஒளவை - தவப்பெண்; தாய்; ஆரியாங்கனை; ஒளவையார்.
ஒளவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஒளனம் - மிளகுரசம்; காயரசம்; மிளகுநீர்.
நன்றி: கழகத் தமிழ் அகராதி
மேற்கண்ட சில வார்த்தைகளை வாசித்தும் வந்த எதிர்வினை:
ஐ!
ஓ!
ம்.
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Wednesday, February 23, 2005
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இராதகிருஷ்ணன் நல்ல பதிவு.ஒளவை என்றால் தாய் என்ற ஒரு அர்த்தம் இருப்பது இப்போழுது தான் தெரியும்.
ஒளருவவிரதி என்ன அழகான எளிய வார்த்தை.
இராதகிருஷ்ணன் நல்ல பதிவு.ஒளவை என்றால் தாய் என்ற ஒரு அர்த்தம் இருப்பது இப்போழுது தான் தெரியும்.
ஒளருவவிரதி என்ன அழகான எளிய வார்த்தை.
நன்றி கங்கா!
Thank you Mr. இராதகிருஷ்ணன்
I was just trying to put something in my blog and was searching for apt words in "ஒள" and your blog entry helped me
எவ்வளவு அருமையான 'ஒள' வார்த்தைகள் .. படிக்கும் காலத்தில் ஒளவையும் ஒளரங்கசீப்பும் மட்டும் தெரியும் ..அதிலும் ஒளரங்கசீப் --ஒலரங்கசீப்பாக படிக்கப்படுவார் .. அழகு அழகான 'ஒள' வார்த்தைகளுக்கு நன்றி ....
Post a Comment