அறிவு, திறமை, ஆர்வம் அனைத்தும் இருந்தும் பொருள் வளம் இல்லாதிருப்பது துரதிஷ்டமான ஒன்று. நல்ல நோக்கத்திற்குப் பொருளுதவி கிடைப்பதும் அரிதான காரியமாகவே இருக்கிறது. வரலாறு மின்னிதழின் பிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 பதிப்பில் வந்துள்ள செய்தியொன்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். புத்தகம் எழுதுவதென்பது, அதுவும் ஆய்வுக் கட்டுரைகளுடன், அனைவராலும் செய்துவிடக்கூடிய சாதாரண காரியமல்ல. அப்படி எழுதியும் அதை எளிதில் வெளியிடச் செய்யமுடியாத நிலை இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஒரு புத்தகத்தை வெளிக்கொண்டுவர எவ்வளவு சிரமப்படவேண்டியுள்ளது! "பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்" என்ற புத்தகத்தின் ஆசிரியர் இரா.கலைக்கோவனின் வார்த்தைகள்:
"...ஏராளமான ஆய்வுகள் செய்து வைத்திருக்கிறோம். வெளியிடுவதற்கு வாய்ப்பில்லை.......
ஆளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்தால் ஐந்து பேர்கள் என்றாலும் ஆறு மாதங்களில் முப்பதாயிரம் ரூபாய் சேர்ந்துவிடும். ஒரு புத்தகம் கொண்டுவர முடியும். ஆண்டுக்கு இரண்டு நூல்கள் கொண்டு வரலாம். இரண்டாண்டுகளுக்கு அப்படிக் கொண்டு வந்தால் பிறகு நூலகங்கள் வாங்குகின்ற அந்த பதிப்பகத் தொகை கொண்டே தொடர்ந்து நூல்கள் வெளியிட வாய்ப்பாக இருக்குமென்று சொன்னேன்.
உடனே ஒப்புக்கொண்டார். அவருடன் இணைந்த நண்பர்கள் இராமசந்திரன், கோகுல், கமலக்கண்ணன், செல்வி இலாவண்யா. இந்த ஐந்துபேரும் சென்ற ஜூன் மாதத்திலிருந்து மாதந்தோறும் அவர்கள் வாங்குகின்ற ஊதியத்திலிருந்து தலைக்கு ஆயிரம் ரூபாய் சேமித்து மாதத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் என்று ஆறு மாதங்களில் முப்பதாயிரம் ரூபாய் சேமித்து மேற்கொண்டு ஒரு ஐந்தாயிரமும் கொடுத்து இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
உண்மையிலேயே நான் பூரித்துப்போய்ச் சொல்கிறேன் - தமிழ்நாட்டு வரலாற்றுக்கு இப்படி ஒரு குழு அமையுமானால் சரியான வரலாற்றை சரியான தரவுகளோடு எழுதிவிடலாம்.
அறியாத தமிழ்நாட்டு வரலாற்றை எழுத இங்கு ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். வெளியிடுவதற்குத்தான் சரியான ஆட்களில்லை."
பொருளிருப்போர் வாசிக்காவிடினும் புத்தகமொன்றை வாங்கி வைத்தும், ஆர்வமிருப்போர் புத்தகத்தை வாங்கிப் படித்தும் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கலாம்.
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Monday, February 21, 2005
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நல்ல பதிவு. இப்படி உண்மையிலேயெ தமது ஆர்வத்தால் தமிழுக்கு செய்பவர்களைப்பற்றி செய்திகளை வெளியிடுவது அவர்களுக்கு உற்சாகத்தையும், அவர்களுக்கு உதவ நினைப்பவர்களுக்கு பயன்படும்.
முந்தைய பின்னூட்டம் என்னுடையதுதான்.
நல்ல முயற்சி.
நல்ல முயற்சி.
நல்ல முயற்சி.
நன்றி தங்கமணி, சந்திரவதனா!
(ப்ளாக்கரின் பின்னூட்ட வசதி சொதப்புவதுபோல் தெரிகிறது.)
அருமையான முயற்சி, புத்தகம் கிடைக்குமிடங்களை வெளியிடுங்கள். என்னால் முடிந்த வரை செய்தியைப் பரப்பி, புத்தகத்தை வாங்கச் செய்கிறேன்.
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். அப்புத்தகத்தைப் பற்றிய விவரங்களைக் கேட்டு வரலாறு இணைய தளத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பதில் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன்.
நேற்று வந்த மின்னஞ்சலில், வரலாறு மின்னிதழின் அடுத்த பதிப்பில் (மார்ச் 15 - ஏப்ரல் 14) இப்புத்தகத்தின் விவரங்களைப் பற்றி எழுத முயற்சிப்பதாகச் சொல்லியுள்ளனர்.
Post a Comment