எங்கோ தூரத்தில் மெதுவாக ஒலிப்பது போன்று அடுத்த அறையில் ஒலிக்கவிடப்பட்டிருந்த பாடல் காற்றில் தவழ்ந்து வந்து மனதைக் கொஞ்ச நேரம் ஆக்கிரமித்துக் கொண்டது. தாக்கியது கவியா? பாடலா? இசையா? இல்லை அனைத்தும் சேர்ந்தா?
பாடலைக் கேட்க...
நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!
1.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)
2.
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)
3.
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)
4.
துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)
5.
நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)
[நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்]
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Sunday, September 25, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நானும் கேட்டேன். இந்தப்படத்தில் பாடல்களும் இசையும் எனக்குப் பிடிக்கும். நன்றி!
எனக்கும் மிகவும் பிடித்த பாடல்..ஜெயஸ்ரீயின் இனிமையான குரலில்..நன்றி
நன்றி தங்கமணி, ரம்யா நாகேஸ்வரன்!
Post a Comment