படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, August 15, 2005

சம்பளம் எவ்வளவு?

"ஏம்பா எவ்வளவு சம்பளம் வாங்கற?" இக் கேள்விவியைக் கேட்பவர்கள் அப்பாவித்தனமாகக் கேட்கலாம்; தன் (அல்லது வேண்டப்பட்டவர்களின்) சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து மனதுக்குள் நகைத்துக் கொள்ளக் கேட்கலாம் அல்லது காதில் புகை விட்டுக் கொள்வதற்குக் கேட்கலாம்; இன்னும் எத்தனையோ. ஆனால், கேட்கப்படுபவர்களுக்கு கொஞ்சம் தர்ம சங்கடத்தைக் கொடுக்கும் கேள்விதான்; அதுவும் இடம், காலமறியாமல் கேட்கப்படும் சமயத்தில். இந்தக் கேள்விக்கு எந்த மாதிரியான பதில் சொல்லப்பட்டிருக்கும் என்பதும் அவரவர்களுக்கே தெரியும்.

தினக் கூலி வேலைக்குப் போகிறவர்களுக்கு இக்கேள்விகள் பற்றிக் கவலையில்லை - உலகத்திற்கே தெரியுமே களையெடுக்குப் போகும் மாரியம்மாவுக்கு எவ்வளவு வாங்குகிறாள் என்று! அம்பானிகளுக்கும் கவலையில்லை, அவர்களின் 'சம்பள'த்தைக் கட்டம்போட்டுப் பத்திரிக்கைகளில் காட்டிவிடுகின்றனர். மலைக்கும் மடுவுக்கும் இடையில் ஒரு பெருங்கூட்டம் இக்கவலையில் என்றும் அல்லாடிக் கொண்டே இருக்கிறது.

5 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ஆகா! சரியாச் சொன்னீங்க. ரொம்ப நாள் கழிச்சுப் பாத்திருப்போம். எங்காவது விருந்துல ஒரு நிமிஷம் பாக்குற சொந்தம் வந்து இந்தக் கேள்வி கேக்குறப்போ ஏற்படுற தர்ம சங்கடத்த எப்படிச் சொல்றது போங்க!

Boston Bala said...

'ஏதோ... பொழப்பு ஓடுதுங்க. வாய்க்கும் கைக்கும் சரியா இருக்குதுங்க' என்றால் திமிர் பிடித்தவன் என்னும் பட்டமும் கிடைக்கும் :-)

இராதாகிருஷ்ணன் said...

நன்றி செல்வராஜ், பாலாஜி!

எம்.கே.குமார் said...

சம்பளத்த மட்டும் சொல்லாம வேற எப்படில்லாம் இந்தக்கேள்விக்கு பதிலைச்சொல்லலாமுன்னு கொஞ்சம் ஐடியா கொடுங்களேன் ரா.கி.

எம்.கே.குமார்

வெற்றி said...

"ஏதோ படைச்சவன் படியளக்கிறான்" :-))

நல்ல சுவாரசியமான பதிவு.