படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, April 18, 2005

ஸெஹ்ஸலொய்ட்டன்-2005

அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டிருக்கிறது! நேற்றுத்தான் இவ்விழாவினைக் கண்டதுபோல இருக்கிறது. இன்று எற்பாடு மூன்று மணிக்குத் தொடங்கி இவ்வாண்டிற்கான பனிமனிதனை எரிக்கும் விழா சில மணி நேரங்கள் ஜூரிக் நகரில் நடைபெற்றது.

சென்ற வருடத்தைய பதிவு.

குளிர்காலம் போய்விட்டாலும், தற்போது இருந்து கொண்டிருக்கும் மேகமூட்டமும் மழைத் தூறலும் முந்தைய ஓரிரு வாரங்களின் இளவெயிலின் போது பூத்து மலர்ந்த மலர்களின் பொலிவை (தற்காலிகமாக) இழக்கச் செய்துவிட்டதோடு, இலேசான குளிரையும் தந்துகொண்டுள்ளது.

[எற்பாடு - "...பகல் என்பது 10 மணியில் இருந்து 14 மணிவரை, எற்பாடு என்பது 14ல் இருந்து 18 வரை, மாலை என்பது 18ல் இருந்து 22 வரை..." - http://valavu.blogspot.com/2005/04/blog-post_111354261723461104.html]

2 comments:

Thangamani said...

இந்த ஏற்பாடு என்ற சொல்லை எனக்கு பிடித்துவிட்டது; அதை பயன்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி!

இராதாகிருஷ்ணன் said...

நன்றி தங்கமணி! வழக்கத்தில் இருந்து மறைந்த அச்சொல்லைத் தெரியப்படுத்திய இராம.கி அவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

தங்கள் பின்னூட்டத்தில் ஒரு சிறு திருத்தம்: 'ஏற்பாடு'-க்குப் பதில் 'எற்பாடு'.