"பல சமயங்களில் மிகவும் சாதாரணமான கட்டுரைகளே தினமணியில் வெளியாகின்றன." இதை வாசித்ததும் மனதிலிருந்த புலம்பல்கள் சில மீண்டும் தலைதூக்கின.
தற்காலங்களில் மற்ற பத்திரிக்கைகளுக்கும் தினமணிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மிகமுக்கியமாக எதாவது நடந்துகொண்டிருக்கும், இங்கு பர்வேஸ் முசாரஃப் பற்றி தலையங்கம் எழுதிக்கொண்டிருப்பார்கள். கட்டுரைகள் அறிவுரை போதிப்பவைகளாகவோ அல்லது ரவி ஸ்ரீனிவாஸ் குறிப்பிட்டது போல சாதாரணமானவைகளாகவே இருக்கின்றன, பெரும்பாலும். தமிழ் உபயோகத்திற்கு சற்று முக்கியத்துவம் அளித்துக்கொண்டிருந்தனர், அதுவும் பழங்கதையாகிவிட்டது.
பள்ளி, கல்லூரி நாட்களில் தினமணியைப் பற்றிய பெரிய பிம்பம் மனதில் இருந்தது. தினமணியில் (நாளிதழ், தமிழ்மணி, கதிர் ...) வரும் தலையங்கங்கள், கட்டுரைகள் போன்றவற்றை கத்தரித்துச் சேகரித்துவைத்த காலமெல்லாம் ஒன்று. ஒருவேளை அப்பொழுதும் இப்படித்தான் இருந்ததோ?!
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Friday, December 24, 2004
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
/ஒருவேளை அப்பொழுதும் இப்படித்தான் இருந்ததோ?!/ சிந்திக்க வேண்டிய கேள்வி-திணமணிக்கு மட்டுமில்லாமல்.
தினமணி மட்டுமல்ல, மற்ற தமிழ் நாளிதழ்களும் சூம்பிப் போய், நாங்களும் கச்சேரிக்குப் போய்வருகிறோம் என்று வந்து கொண்டிருக்கின்றன. பணம் பண்ணட்டும்; வேண்டாம் என்று சொல்லவில்லை; ஆனால் கறியே இல்லாமல் கடை வைத்தால் எப்படி? (Remember Walter Mondale? He asked during a Presidential contest: "But where is the meat?") வெறும் எலும்புச் சக்கைகளை வைத்துக்கொண்டு (திரைப்படம், ஆளடி அரசியல், அதிரடி கொலை/கொள்ளை பற்றிய செய்திகள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு) நாளிதழ்க் கடைகளை விரித்தால் என்ன செய்வது?
அப்புறம். தமிழ்ப் பயன்பாடு. ஒரு காலத்தில் ஆங்கிலம் அல்லது வடமொழியை அவ்வளவு கலக்காமல், ஓரளவு நல்லதமிழில் தினமணி எழுதியதை இப்போதும் எண்ணிப் பார்த்துப் பெருமூச்சு விடும் நிலையில்,
அன்புடன்,
இராம.கி.
By: iraamaki
once dinamani had a regular supplement for science and i had written in that.it was edited by mr.ramadurai and later it was stopped.in the
early and mid nineties dinamani had published
many important articles in edit page.s.v.rajadurai
had written in that and he and v.gita, together
wrote a rejoinder to an article by indira parthasarathy and later the whole debate was
published as a book
.i myself had written atleast two long articles in dinamani in the early or mid nineties when there was a debate on GATT.
dinamani used to edit and publish articles then
even if the view is controversial.now most articles are published as if to fill the
space. that is a downfall
ravi srinivas
By: ravi srinivasBy: annon
Post a Comment