Map என்ற சொல்லிற்கு மேற்கூறிய சில சொற்கள் ஒத்ததாகச் சொல்லிப் புழங்கப்பட்டு வந்தாலும் இவை ஏனோ திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. நல்ல சொல் அகப்படுமா? சொல்ல நினைத்தது அதுவல்ல.
செல்வராஜின் மிதிவண்டிப் பயணங்கள்-2ல் இருந்த map-ஐக் கண்டதும் உள்ள ஆதங்கங்களுள் ஒன்று நினைவிற்கு வந்தது. இப்படங்கள் விரிவாகவும், தெளிவாகவும், சரியாகவும் இல்லாததன் காரணங்கள் என்னவென்று தெரியவில்லை. கொள்வோரில்லாததால் கொடுப்போரில்லையா இல்லை இவற்றின் தேவைகள் பெரிதாக இல்லையா?
வளர்ந்த நாடுகளில் உள்ள இம்முறைமைகள் வியப்பூட்டும் வகையில் உள்ளன. காகிதத்திலாகட்டும், கணியிலாகட்டும் அல்லது வேறு எந்த மிடையத்திலாகட்டும் அவற்றின் வீச்சும் பயன்பாடும் பாராட்டத்தக்கவை. நாம் மட்டும் ஏன் இன்னும் ஐதர் அலி காலத்திலேயே இருக்கிறோம்?
கீழே: தஞ்சாவூர் பயண வழிகாட்டி!!!
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Wednesday, May 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆமாங்க, நிலப்படமும் வரைபடமும் சரியாகத் தெரியவில்லை.
இந்த தளத்தில் இந்தியா மேப்களை ஆன்லைனாக பார்க்கலாமாம்:
http://www.mapmyindia.com
பெங்களூர் சென்றிருந்த போது அங்கு கிடைத்த Eicher பொரிம்பு (பிராண்ட்) வரைபட ஏடு தரமாக இருந்தது. அவர்களே சென்னை, தில்லி, போன்ற பெருநகர வரைபடங்களும் தருகிறார்கள் என்றும் அறிந்தேன். விலை கொஞ்சம் அதிகம் தான்.
மற்றபடி இணையத்தில் இந்தப் படங்கள் கொஞ்சம் அரிதாகவும் தரமற்றதாகவும் தான் இருக்கின்றன.
ஐஸரின் நிலவரைபடப் புத்தகம் உண்மையில் தரமானதாக உள்ளது. நான் சென்னையின் நிலவரைபடம் வைத்துள்ளேன். தெளிவாக உள்ளது.
ஜீவா,சுட்டிக்கு நன்றி!
செல்வராஜ், நாகு, ஐஸரின் படப்புத்தகங்களைப் பார்த்ததில்லை. அவை தரமாக இருப்பது குறித்து அறிவதில் மகிழ்ச்சி. இதுபோன்ற படங்களைப் பல்வேறு துறைகளில் நிறைய உபயோகித்துக் கொண்டே இருந்தால் தரமுடன் நிறைய மாதிரிகள் வரக்கூடும்.
Post a Comment